GOLD PRICE TODAY : தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு- இன்றைய நிலவரம்

நேற்று தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,400-க்கு விற்பனையானது. வெள்ள விலை இன்று சற்று குறைந்துள்ளது.
GOLD PRICE TODAY : தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு- இன்றைய நிலவரம்
Published on

சென்னை:

தங்கம் விலை கடந்த மாதம் (பிப்ரவரி) முதல் ஏற்ற, இறக்கத்துடன் இருக்கிறது. கடந்த 4-ந்தேதியில் இருந்து விலை அதிகரித்து காணப்பட்டது. கடந்த வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 வரை உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான நேற்று தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,400-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,020-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.64,160-க்கும் விற்பனையாகிறது.

கடந்த 5 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ள விலை இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

10-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,400

09-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,320

08-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,320

07-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,240

06-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,480

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

10-03-2025- ஒரு கிராம் ரூ.108

09-03-2025- ஒரு கிராம் ரூ.108

08-03-2025- ஒரு கிராம் ரூ.108

07-03-2025- ஒரு கிராம் ரூ.108

06-03-2025- ஒரு கிராம் ரூ.108

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com