GOLD PRICE TODAY : அதிரடியாக குறைந்த தங்கம் விலை... உச்சத்தை தொட்ட வெள்ளி விலை- இன்றைய நிலவரம்

நேற்றும் தங்கம் புதிய உச்சத்தை தொட்டு இருந்தது.தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது.
GOLD PRICE TODAY : அதிரடியாக குறைந்த தங்கம் விலை... உச்சத்தை தொட்ட வெள்ளி விலை- இன்றைய நிலவரம்
Published on

சென்னை:

தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த மாதம் (செப்டம்பர்) 23-ந்தேதி ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை தாண்டிய நிலையில், தொடர்ந்து உயர்ந்து வந்து நேற்று முன்தினம் ஒரு சவரன் ரூ.91 ஆயிரம் என்ற நிலையையும் கடந்து புதிய உச்சத்தை பதிவு செய்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலை உயர்வை கண்டது. காலையில் கிராமுக்கு ரூ.15-ம், சவரனுக்கு ரூ.120-ம், பிற்பகலில் கிராமுக்கு ரூ.25-ம், சவரனுக்கு ரூ.200-ம் அதிகரித்திருந்தது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 385-க்கும், ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்து 80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 425-க்கும், ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. நேற்றும் தங்கம் புதிய உச்சத்தை தொட்டு இருந்தது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 165 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 11,260 ரூபாய்க்கும்சவரனுக்கு 1.320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.90,080-க்கும் விற்பனையாகிறது.

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில், இன்று கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 180 ரூபாய்க்கும் கிலோவுக்கு மூவாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

09-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,400

08-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,080

07-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 89,600

06-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 89,000

05-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,600

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

09-10-2025- ஒரு கிராம் ரூ.177

08-10-2025- ஒரு கிராம் ரூ.170

07-10-2025- ஒரு கிராம் ரூ.167

06-10-2025- ஒரு கிராம் ரூ.167

05-10-2025- ஒரு கிராம் ரூ.165

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com