GOLD PRICE TODAY : வார தொடக்கத்தில் குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம்

கடந்த வாரம் இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டு சவரன் ரூ.80 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
GOLD PRICE TODAY : வார தொடக்கத்தில் குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம்
Published on

சென்னை:

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதனை தொடர்ந்து கடந்த வாரம் இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டு சவரன் ரூ.80 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.

இந்நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,970-க்கும் சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.79,760-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 137 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 37ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

07-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,040

06-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,040

05-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.78,920

04-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.78,360

03-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.78,440

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

07-09-2025- ஒரு கிராம் ரூ.138

06-09-2025- ஒரு கிராம் ரூ.138

05-09-2025- ஒரு கிராம் ரூ.136

04-09-2025- ஒரு கிராம் ரூ.137

03-09-2025- ஒரு கிராம் ரூ.137

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com