GOLD PRICE TODAY : வார இறுதியில் அதிரடியாக சரிந்த தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது.நேற்று விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.73,040-க்கும் விற்பனையானது.
GOLD PRICE TODAY : வார இறுதியில் அதிரடியாக சரிந்த தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா?
Published on

சென்னை:

தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.1,120-ம், செவ்வாய்கிழமை ரூ.160-ம், புதன்கிழமை ரூ.80-ம், நேற்றுமுன் சவரனுக்கு ரூ.320 உயர்ந்தும், நேற்று விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.73,040-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், வார இறுதிநாளான இன்று தங்கம் அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 150 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,980-க்கும் சவரனுக்கு 1200 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.71,840-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 117 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 17 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

06-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,040

05-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,040

04-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,720

03-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,640

02-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,480

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

06-06-2025- ஒரு கிராம் ரூ.118

05-06-2025- ஒரு கிராம் ரூ.114

04-06-2025- ஒரு கிராம் ரூ.114

03-06-2025- ஒரு கிராம் ரூ.113

02-06-2025- ஒரு கிராம் ரூ.111

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com