காலையில் உயர்ந்து மாலையில் குறைந்த தங்கம், வெள்ளி விலை

காலையில் இன்று கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,870-க்கு விற்பனையானது. சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 960 ரூபாய்க்கும் விற்பனையானது.
காலையில் உயர்ந்து மாலையில் குறைந்த தங்கம், வெள்ளி விலை
Published on

சென்னை:

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை காலை, மாலை என இருவேளைகளில் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தில் விற்பனையாகிறது. இதனால் சுபநிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்க நினைப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை காலையில் உயர்ந்தது. கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,870-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 960 ரூபாய்க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் மாலையில் தங்கம் விலை சற்று குறைந்தது. அதன்படி கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,800-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அந்த வகையில், கிராமுக்கு 6 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 277 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

6-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,640

5-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,080

4-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,800

3-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,800

2-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,640

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

6-1-2026- ஒரு கிராம் ரூ.271

5-1-2026- ஒரு கிராம் ரூ.266

4-1-2026- ஒரு கிராம் ரூ.257

3-1-2026- ஒரு கிராம் ரூ.257

2-1-2026- ஒரு கிராம் ரூ.260

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com