GOLD PRICE TODAY : சற்று குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம்

இதுவரை இல்லாத உச்சமாக நேற்று தங்கம் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் இரண்டாவது நாளாக மாற்றமில்லை.
GOLD PRICE TODAY : சற்று குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம்
Published on

சென்னை:

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு 680 ரூபாயும், நேற்றுமுன்தினம் சவரனுக்கு 160 ரூபாயும், நேற்று சவரனுக்கு 640 ரூபாயும் உயர்ந்து ஒரு சவரன் ரூ.78,440-க்கு விற்பனையானது. வரலாற்றில் இதுவரை இல்லாத உச்சமாக நேற்று தங்கம் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்றும் தங்கம் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,795-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.78,360-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் இரண்டாவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 137 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 37ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

03-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.78,440

02-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.77,800

01-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.77,640

31-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.76,960

30-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.76,960

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

03-09-2025- ஒரு கிராம் ரூ.137

02-09-2025- ஒரு கிராம் ரூ.137

01-09-2025- ஒரு கிராம் ரூ.136

31-08-2025- ஒரு கிராம் ரூ.134

30-08-2025- ஒரு கிராம் ரூ.134

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com