GOLD PRICE TODAY : சற்று குறைந்த தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா?

வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை.பார் வெள்ளி ஒரு லட்சத்து 96 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
GOLD PRICE TODAY : சற்று குறைந்த தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா?
Published on

சென்னை:

தங்கம் விலை ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமான நிலையிலேயே நீடித்து வருகிறது. கடந்த வாரமும் இதே நிலை நீடித்தாலும், வார இறுதிநாளான கடந்த 29-ந்தேதி ஒரு சவரன் 95 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து நேற்று தங்கம் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,560 ஆயிரத்துக்கு விற்பனையானது.

இதனால் இன்றும் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.12,040-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.96,320 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

நேற்று அதிரடியாக உயர்ந்த வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. கிராம் வெள்ளி 196 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து 96 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

01-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,560

30-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.94,400

29-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.94,400

28-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.94,400

27-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.94,400

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

01-12-2025- ஒரு கிராம் ரூ.196

30-11-2025- ஒரு கிராம் ரூ.192

29-11-2025- ஒரு கிராம் ரூ.192

28-11-2025- ஒரு கிராம் ரூ.183

27-11-2025- ஒரு கிராம் ரூ.180

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com