உடலுக்கு ஊட்டம் தரும் நார்ச்சத்து

கரையக்கூடிய நார்ச்சத்து நீரில் கரைந்து ஜெல் மாதிரி ஆகி, உடலின் கொழுப்புச் சத்து அளவைக் குறைக்க உதவுகிறது. கரையாத நார்ச்சத்து குடலின் இயக்கத்தை விரைவாக்கி மலச்சிக்கலை தடுக்கும்.
உடலுக்கு ஊட்டம் தரும் நார்ச்சத்து
Published on

நம் உடலின் சரியான செயல்பாட்டிற்கு நார்ச்சத்து மிகவும் முக்கியமானது. பல வகையான நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. நார் பொதுவாக கரையக்கூடிய நார் மற்றும் கரையாத நார் என்று இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது.

இந்த 2 வகைகளிலும் பல ஊட்டச்சத்துகள் உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் வயிற்றில் இருந்து செரிக்கப்படாமல் உங்கள் பெருங்குடலுக்குச் சென்று வயிற்றை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். அவை பக்கவாதம், நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற சில நோய்களைத் தடுக்க உதவுகின்றன. தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் எடையை கட்டுப்படுத்துவதிலும் உதவுகின்றன.

கரையக்கூடிய நார்ச்சத்து நீரில் கரைந்து ஜெல் மாதிரி ஆகி, உடலின் கொழுப்புச் சத்து அளவைக் குறைக்க உதவுகிறது. கரையாத நார்ச்சத்து குடலின் இயக்கத்தை விரைவாக்கி மலச்சிக்கலை தடுக்கும். நார்ச்சத்து உணவுகள் குடலில் நீரை இழுத்து செரிமானத்தை எளிதாக்கும். இதனால் மலச்சிக்கல் பிரச்சனை குறையும், குடல் சுத்தமாக இருக்கும்.

நார்ச்சத்து நிறைந்த உணவுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை மெதுவாக அதிகரிக்கச் செய்கின்றன. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாகும். கரையக்கூடிய நார்ச்சத்து, கொழுப்புச் சத்து அளவைக் குறைக்கிறது. இதனால் இதய நோய்களின் ஆபத்து குறைகிறது. சில ஆய்வுகள் கூறியபடி நார்ச்சத்து நிறைந்த உணவுகள் குடல் புற்றுநோயைத் தடுக்க உதவுகின்றன என்கின்றனர் டாக்டர்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com