இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 4 பிப்ரவரி 2025

ரத சப்தமி (ஏழு எக்கு இலை, பச்சரிசி, விபூதி இவைகளை தலையில் வைத்து நீராடல் உத்தமம்). திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் ரத்தின சிம்மாசனத்தில் புறப்பாடு.
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 4 பிப்ரவரி 2025
Published on

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு தை-22 (செவ்வாய்க்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: சஷ்டி காலை 7.54 மணி வரை பிறகு சப்தமி மறுநாள் விடியற்காலை 4.15 மணி வரை பிறகு அஷ்டமி

நட்சத்திரம்: அசுவினி நள்ளிரவு 12.52 மணி வரை பிறகு பரணி

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம்: வடக்கு

நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

இன்று ரத சப்தமி (ஏழு எக்கு இலை, பச்சரிசி, விபூதி இவைகளை தலையில் வைத்து நீராடல் உத்தமம்). சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் ரத்தின சிம்மாசனத்தில் புறப்பாடு. கோவை ஸ்ரீ பால தண்டாயுதபாணி உற்சவம் ஆரம்பம். திருவல்லிக் கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம். ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் 4-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-அமைதி

ரிஷபம்-நட்பு

மிதுனம்-சுகம்

கடகம்-உயர்வு

சிம்மம்-நலம்

கன்னி-உயர்வு

துலாம்- திடம்

விருச்சிகம்-மகிழ்ச்சி

தனுசு- வரவு

மகரம்-லாபம்

கும்பம்-பயணம்

மீனம்-கவனம்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com