இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 3 ஜூலை 2025

திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சனம். ஸ்ரீ வைகுண்டம் வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 3 ஜூலை 2025
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு ஆனி-19 (வியாழக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : அஷ்டமி மாலை 4.32 மணி வரை பிறகு நவமி

நட்சத்திரம் : அஸ்தம் மாலை 4.33 மணி வரை பிறகு சித்திரை

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம் : தெற்கு

நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

திருவல்லிக்கேணி ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சனம், அபிஷேகம்

சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். கண்டதேவி, காணாடுகாத்தான் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் திருக்கல்யாணம். மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஊஞ்சலில் காட்சி. திருக்கோளக்குடி ஸ்ரீ கோளபுரீஸ்வரர் திருக்கல்யாணம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி உற்சவம் ஆரம்பம். குருவித்துறை சித்திர ரதவல்லப பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ குரு பகவானுக்கு அபிஷேகம். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு.

திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சனம். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உடையவருடன் புறப்பாடு. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமான் வழிபாடு. ஸ்ரீ வைகுண்டம் வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-களிப்பு

ரிஷபம்-உழைப்பு

மிதுனம்-இன்பம்

கடகம்-இரக்கம்

சிம்மம்-நன்மை

கன்னி-பண்பு

துலாம்- பணிவு

விருச்சிகம்-ஆர்வம்

தனுசு- வெற்றி

மகரம்-சுகம்

கும்பம்-லாபம்

மீனம்-ஆதரவு

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com