ஓ.டி.டி.யில் வெளியான "தென் சென்னை" திரைப்படம்

புது முகங்கள் ரங்கா, ரியா நடித்துள்ள திரைப்படம் தென் சென்னைஜென் மார்டின், இந்த படத்திற்க்கு பின்னனி இசை அமைத்துள்ளார்.
ஓ.டி.டி.யில் வெளியான  "தென் சென்னை" திரைப்படம்
Published on

புது முகங்கள் ரங்கா, ரியா நடிப்பில் புதுமையான ஆக்சன் திரில்லராக அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் "தென் சென்னை"

அறிமுக இயக்குநர் ரங்கா இப்படத்தை தயாரித்து இயக்குவதுடன், கதையின் நாயகன், பாடல் ஆசிரியர் என பல முயற்சிகளில் இறங்கியுள்ளார்.

இதில் முன்னாள் ராணுவ அதிகாரியாக இருந்து நடிகரான நிதின் மெஹ்தாவும், இளங்கோ குமனனும் பிரதான பாத்திரங்களில் நடித்தனர். மேலும் வத்சன் நடராஜன், சுமா, ஆறு பாலா, திலீபன், தாரனி மற்றும் பலர் இதில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஜென் மார்டின், இந்த படத்திற்க்கு பின்னனி இசை அமைத்துள்ளார். குறைந்த அளவு திரையரங்குகளிள் வெளிவந்த இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

படம் பார்த்த அனைவரும் கதை, திரைக்கதை, அனைவரின் நடிப்பு மற்றும் புதிய படக்குழுவினரின் முயற்சிகளுக்கு பெரும் பாராட்டைத் தந்தனர்.

இந்த நிலையில் இப்படம் டென்ட்கொட்டா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவு

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com