'கெணத்த காணோம்'... வெளியானது யோகி பாபுவின் புது பட அப்டேட்

சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள புதிய படம் ஒன்றில் யோகி பாபு நடித்துள்ளார்.போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
'கெணத்த காணோம்'... வெளியானது யோகி பாபுவின் புது பட அப்டேட்
Published on

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் யோகி பாபு. இவர் ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நகைச்சுவை கதாபாத்திரங்கள் மட்டுமின்றி பல்வேறு படங்களில் கதாநாயகனாகவும் இவர் நடித்துள்ளார்.

அந்த வகையில், சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள புதிய படம் ஒன்றில் யோகி பாபு நடித்துள்ளார். ஆர்.பி.டாக்கீஸ், பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் லவ்வின் சந்திரசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இப்படத்தில் ஜார்ஜ் மரியன், ரேச்சல் ரெபெக்கா மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் வறண்ட மற்றும் தரிசு கிராம மக்களைச் சுற்றி நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், யோகி பாபு நடித்துள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. அந்த போஸ்டரில் படத்தின் தலைப்பு 'கெணத்த காணோம்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார்.

போஸ்டரில் கிராம மக்களுடன் சேர்ந்து தண்ணீருக்காக யோகி பாபு பிரார்த்தனை செய்கிறார். இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com