திரில்லர் படத்தில் நடித்து முடித்த யாஷிகா ஆனந்த்

டுவிங்கில் லேப்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.ஏ. பாலா தயாரித்து, இயக்கும் திரைப்படம் "எக்ஸ்ரே கண்கள்எக்ஸ்ரே கண்கள் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்து இருக்கிறது.
திரில்லர் படத்தில் நடித்து முடித்த யாஷிகா ஆனந்த்
Published on

டுவிங்கில் லேப்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.ஏ. பாலா தயாரித்து, இயக்கும் திரைப்படம் "எக்ஸ்ரே கண்கள்." சில மாதங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்றது. இந்த நிலையில், எக்ஸ்ரே கண்கள் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்து இருக்கிறது.

முன்னாள் ராணுவ வீரரான எம்.ஏ. பாலா ஏற்கனவே 'கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்' என்ற படத்தை தயாரித்து, இயக்கினார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், எக்ஸ்ரே கண்கள் என்ற படத்தை தயாரித்து, இயக்கியுள்ளார்.

எம்.ஏ.பாலா எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மருத்துவரான ராம் பிரசாத் நடிக்கிறார். மிஸ்ட்ரி திரில்லர் கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் நாயகி யாஷிகா ஆனந்த் மற்றும் நாயகன் ராம் பிரசாத் இருவரும் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை மோகன வேலு மேற்கொள்கிறார். எக்ஸ்ரே கண்கள் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ள நிலையில், விரைவில் இதன் வெளியீடு மற்றும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது.

எக்ஸ்ரே கண்கள் படக்குழு விவரம்:

நடிகர், நடிகைகள்: யாஷிகா ஆனந்த், ராம் பிரசாத், கௌஷிக், தீப்ஷிகா, எம்.பி. முத்துப்பாண்டி, எஸ்.எஸ். ஜெய் சிந்த், பசுபதி ராஜ், தீபக், பிரதீப் ராஜ்

தொழில்நுட்ப கலைஞர்கள்: இயக்குநர் எம்.ஏ.பாலா, ஒளிப்பதிவாளர் மோகன வேலு, நிர்வாக தயாரிப்பாளர் மணிகண்டன் ஆர், கலை இயக்குநர் சதீஷ் குமார்.எஸ்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com