வரும் ஆண்டுகளில் பல மேஜிக்கை உருவாக்க போகிறோம் - லோகேஷ் கனகராஜ் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கூலி.இன்று பிறந்தநாள் கொண்டாடும் லோகேஷ் கனகராஜுக்கு பல்வேறு திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
வரும் ஆண்டுகளில் பல மேஜிக்கை உருவாக்க போகிறோம் - லோகேஷ் கனகராஜ் வாழ்த்து
Published on

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இந்தப் படத்தின் டைட்டில் வீடியோ மற்றும் பாடல் க்ளிம்ப்ஸ் உள்ளிட்டவை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இரண்டு வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் லோகேஷ் கனகராஜுக்கு பல்வேறு திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர் கூலி திரைப்படக்குழுவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் இதே நாளில் பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் அமீர் கானுக்கு வாழ்த்து தெரிவித்து அவருடன் பேசும் புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அதில் அவர் " இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார். நாம் பேசிய அந்த அழகான உரையாடலகளை நான் என்றும் மறக்க மாட்டேன். உங்களின் கதை சொல் ஆற்றலை கண்டு என்றும் வியந்துள்ளேன். இந்த ஸ்பெஷலான நாளை உங்களுடன் பகிர்ந்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்." என பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே அமீர்கான் கூலி திரைப்படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இந்த புகைப்படம் அதனை உறுதி படுத்தும் வகையில் இருப்பதால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

கூலி படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குகின்றனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com