

'வெண்ணிலா கபடிகுழு', 'நீர்ப்பறவை', 'முண்டாசுப்பட்டி', 'ராட்சசன்', 'கட்டா குஸ்தி' போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் விஷ்ணு விஷால். இவர் கடைசியாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'லால் சலாம்' திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆர்யன்'. இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கியுள்ளார்.
இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் விஷ்ணு விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஜிப்ரான் இசையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சமீபத்தில் வெளியானது. மேலும் படத்தின் டிரெய்லரும் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது.
இப்படம் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அக்டோபர் மாதம் 31-ந்தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் ஆர்யன் படத்தின் தெலுங்கு வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக விஷ்ணு விஷால் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பபில், ஆகஸ்ட் 31 அன்று பாகுபலி தி எபிக் மற்றும் ரவி தேஜாவின் மாஸ் ஜாதாரா படங்கள் வெளியாக உள்ளதால் ஆர்யன் படம் தெலுங்கில் மட்டும் நவம்பர் 7 ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
ராஜமௌலி இயக்கிய பாகுபலி 1 மற்றும் 2 ஆம் பாகங்கள் ஒரே திரைப்படமாக இணைக்கப்பட்டு அக்டோபர் 31 அன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Dear Telugu audience,#Aaryan (Telugu) will meet you in cinemas one week later, on November 7.With love and respect,Vishnu Vishal. pic.twitter.com/82WiK9p8iG