ராட்சசன் 2 பட அப்டேட் கொடுத்த விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால் ஓஹோ எந்தன் பேபி திரைப்படத்தை தயாரித்துள்ளார்.இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து இருந்தார்.
ராட்சசன் 2 பட அப்டேட் கொடுத்த விஷ்ணு விஷால்
Published on

கடந்த 2018 ஆம் ஆண்டு ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், சரவணன் மற்றும் அம்மு அபிராமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் ராட்சசன். இப்படம் வெளியாகி ப்ளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது.இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து இருந்தார்.

இந்நிலையில் விஷ்ணு விஷால் ஓஹோ எந்தன் பேபி திரைப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் மூலம் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

விஷ்ணு விஷால் அடுத்து இரண்டு வானம் மற்றும் ஆர்யன் திரைப்படத்தில் நடித்துள்ளார். அதைத்தொடர்ந்து வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் த்யாரிப்பில் 3 படங்களில் நடிக்க இருக்கிறார்.

சமீபத்தில் நடந்த பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விஷ்ணு விஷால் அடுத்து கட்டா குஸ்தி 2 மற்றும் ராட்சசன் 2 படத்தில் நடிக்க இருப்பதாக கூறினார். இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com