விக்ரம் பிரபுவின் `Love Marriage' ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்திற்கு 'லவ் மேரேஜ்' என்று பெயரிட்டுள்ளனர்.இப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
விக்ரம் பிரபுவின் `Love Marriage' ஃபர்ஸ்ட் சிங்கிள்  வெளியீடு
Published on

அறிமுக இயக்குநர்சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்திற்கு 'லவ் மேரேஜ்' என்று பெயரிட்டுள்ளனர்.

இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக சுஷ்மிதா பட் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ், முருகானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் படத்தின் முதல் பாடலான கல்யாண கலவரம் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை ஷான் ரோல்டன் எழுதி பாடியுள்ளார்.

திருமணம் தாமதமாவதால் ஒருவர், குடும்பத்திலும் சமூகத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சினை மற்றும் சிக்கல்களைப் பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com