விஜய் நடிக்கும் ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'ஜனநாயகன்'.இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
விஜய் நடிக்கும் ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'ஜனநாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி வருகிறது அதற்கு பின் முழுநேர அரசியலில் ஈடுப்படபோவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழு புது போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com