ரீரிலீஸ் ஆகும் விஜய்யின் 'பகவதி' - திரைக்கு வரும் தேதி இதுதான்!

விஜய், வடிவேலு, ரீமா சென் ஆகியோர் நடிப்பில் வெளியான பகவதி படம் சூப்பர் ஹிட் ஆனது.பகவதி படம் வெளியாகி 23 ஆண்டுகள் ஆனது.
ரீரிலீஸ் ஆகும் விஜய்யின் 'பகவதி'  - திரைக்கு வரும் தேதி இதுதான்!
Published on

1992 இல் நாளைய தீர்ப்பு படத்தில் ஹீரோவாக அறிமுகமான விஜய் ஆக்ஷன் ஹீரோவாக பரிணமித்த படம் பகவதி. 2002 இல் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் விஜய், வடிவேலு, ரீமா சென் ஆகியோர் நடிப்பில் வெளியான பகவதி படம் சூப்பர் ஹிட் ஆனது.

விஜய்க்கும் வடிவேலுவுக்கும் இடையிலான காமெடி காட்சிகளும், டீக்கடை உரிமையாளராக இருந்து கேங்ஸ்டராக விஜய் பரிணமிக்கும் ஆக்ஷன் காட்சிகளும் வெறித்தனமாக அமைந்திருக்கும்.

விஜய்யின் 22 ஆவது படமான இது என்றுமே அவரது கேரியரில் ஸ்பெஷலானதாக இருக்கும்.

பகவதி படம் வெளியாகி 23 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது இப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. அதன்படி வரும் மார்ச் 21 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) படம் ரீரிலீஸ் ஆகும் என தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com