பீனிக்ஸ் படக்குழுவை பாராட்டிய விஜய்

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தற்பொழுது `ஃபீனிக்ஸ்' படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.சண்டை இயக்குனர் அனல் அரசு இப்படத்தை இயக்கியுள்ளார்.
பீனிக்ஸ் படக்குழுவை பாராட்டிய விஜய்
Published on

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தற்பொழுது `ஃபீனிக்ஸ்' படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தற்பொழுது `ஃபீனிக்ஸ்' படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

சண்டை இயக்குனர் அனல் அரசு இப்படத்தை இயக்கியுள்ளார். பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மூலம் அனல் அரசு இயக்குனராக அறிமுகமாகுகிறார்.

படத்தில் சூர்யா பாக்சராக நடிக்க மேலும் வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஹரிஷ் உத்தமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் இன்று வெளியானது.

இந்நிலையில் படத்தை பார்த்து படக்குழுவை பாராட்டியுள்ளார் நடிகர் விஜய். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிக்கும் ஜன நாயகன் படத்திற்கு அனல் அரசு சண்டை பயிற்சி இயக்குநராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com