விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்

இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 11-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் Title Glimpse வீடியோவை ரசிகர்கள் இணையதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்
Published on

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா தனது 'Taxiwaala' இயக்குனர் ராகுல் சங்க்ரித்யனுடன் மீண்டும் இணைந்துள்ளார். இது விஜய் தேவரகொண்டாவின் 14-வது படமாகும்.

இந்த நிலையில் விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கான தலைப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அப்படத்திற்கு 'ரணபாலி' என்று பெயரிடப்பட்டுள்ளது. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 11-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் Title Glimpse வீடியோவை ரசிகர்கள் இணையதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

இதனிடையே, விஜய் தேவகொண்டா- ராஷ்மிகா மந்தனா இருவரும் அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்வதாக தகவல்கள் வெளியான நிலையில், இருவரும் இணைந்து நடித்துள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com