பிப்ரவரியில் ரிலீசாகும் விடாமுயற்சி - வெளியான முக்கிய தகவல்?

பொங்கல் பண்டிகைக்கு விடாமுயற்சி ரிலீஸ் ஆக இருந்தது.இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
பிப்ரவரியில் ரிலீசாகும் விடாமுயற்சி - வெளியான முக்கிய தகவல்?
Published on

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "விடாமுயற்சி." நீண்ட காலமாக படமாக்கப்பட்டு வந்த விடாமுயற்சி திரைப்படம் அனைத்து பணிகளும் முடிவடைந்து, பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. எனினும், கடைசியில் இந்தப் படம் திட்டமிட்டப்படி ரிலீஸ் ஆகவில்லை.

ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6.40 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. முந்தைய தகவல்களின் படி விடாமுயற்சி திரைப்படம் வருகிற 23-ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது.

இது குறித்து தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. ரிலீஸ் தேதி தொடர்பான அறிவிப்பு, டிரெய்லரில் இடம்பெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொண்டுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com