வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் பிரபல இசையமைப்பாளர்

இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் திரைப்படத்தை இயக்கவுள்ளார். அவரது பாணியில் நகைச்சுவையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் பிரபல இசையமைப்பாளர்
Published on

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்ற நிலையில், இந்தப் படம் வசூல் ரீதியில் பட்டையை கிளப்பியது.

இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் திரைப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும் நவம்பர் மாதம் தொடங்க இருக்கிறது. இப்படம் ஒரு டைம் டிராவல் கதைக்களத்தில் உருவாக இருக்கிறது.இப்படமும் அவரது பாணியில் நகைச்சுவையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். வெங்கட் பிரபுவின் பெரும்பாலான திரைப்படங்களுக்கு யுவன் இசையமைப்பதே வழக்கம் ஆனால் இப்படத்தில் அது உடைந்துள்ளது.

சிவகார்த்திகேயன் படத்திற்கு அனிருத் இசையமைக்கும் அனைத்து திரைப்படங்களும் வெற்றிப்படமாக உருவாகியுள்ளது அந்த வரிசையில் இப்படமும் வெற்றியடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் தற்பொழுது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மதராஸி திரைப்படம் வெளியாக இன்னும் 50 நாட்கள் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு திரைப்படங்கள் மீதும் ரசிகர்களுக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com