வைபவ் நடிக்கும் பெருசு படத்திற்கு 'A' சான்றிதழ்.. ஜூம் காலில் ஜாலியாக உரையாடிய படக்குழுவினர்

பெருசு படத்தை கார்த்திக் சுப்பராஜ் ஸ்டோன் பென்ச் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. பெருசு படத்தை இளங்கோ ராம் இயக்கியுள்ளார்.
வைபவ் நடிக்கும் பெருசு படத்திற்கு 'A' சான்றிதழ்.. ஜூம் காலில் ஜாலியாக உரையாடிய படக்குழுவினர்
Published on

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் கார்த்திக் சுப்பராஜ். இவர் தற்பொழுது சூர்யாவின் 45 திரைப்படமான ரெட்ரோ திரைப்படத்தை இயக்கியுள்ளார். திரைப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் ஸ்டோன் பென்ச் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்துள்ளார். ஸ்டோன் பென்ச் நிறுவனம் இதுவரை 15 திரைப்படம் தயாரித்துள்ளது

தற்பொழுது அவர்கள் அடுத்ததாக பெருசு என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இது அவர்கள் தயாரிக்கும் 16- வது திரைப்படமாகும். இப்படத்தை இளங்கோ ராம் இயக்கியுள்ளார். படத்தின் இசையை அருண் ராஜ் மெற்கொண்டுள்ளார்.

இப்படத்தில் வைபவ், சுனில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, பால சரவணன், தீபா, நிஹரிகா, சாந்தினி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படம் வீட்டில் இறக்கும் ஒரு பெரியவரை மற்றும் அந்த இறுதி சடங்கில் நடக்கும் பிரச்சனையை சுற்றி நடைப்பெறவுள்ளது.

இந்நிலையில், பெருசு படத்திற்கு தணிக்கை குழுவினர் 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளனர். இது தொடர்பாக நடிகர் வைபவ், நடிகர் சுனில், நடிகை நிஹரிகா, தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் ஜூம் காலில் பேசிய ப்ரோமோஷன் விடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது.

இப்படம் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்த்து ரசிக்கும் குடும்ப படமாக இருக்கும் என்று அந்த வீடியோவில் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com