கார்த்தி படத்துக்கு 'திடீர்' சிக்கல்- திட்டமிட்ட தேதியில் 'ரிலீஸ்' ஆகுமா?

‘வா வாத்தியார்' படம் டிசம்பர் 5-ந்தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது.படத்தை சொன்ன தேதியில் ரிலீஸ் செய்யக்கோரி ஓ.டி.டி. உரிமம் பெற்ற நிறுவனமும் அழுத்தம் தருகிறதாம்.
கார்த்தி படத்துக்கு 'திடீர்' சிக்கல்- திட்டமிட்ட தேதியில் 'ரிலீஸ்' ஆகுமா?
Published on

'மெய்யழகன்' படத்தைத் தொடர்ந்து, நலன் குமாரசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' என்ற படத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார். கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருக்கிறார். சத்யராஜ், ராஜ்கிரண் உள்பட பலரும் நடித்துள்ளனர்.

'வா வாத்தியார்' படம் டிசம்பர் 5-ந்தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. படத்தின் டீசரும், பாடல்களும் ஏற்கனவே வெளியாகி கவனம் ஈர்த்தன. இதற்கிடையில் இப்படம் ரிலீசாவதில் திடீர் சிக்கல் எழுந்துள்ளது.

அதாவது படத்தின் இறுதிகட்ட பணிகள் இன்னும் முடியாததால், ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளை படத்தை சொன்ன தேதியில் ரிலீஸ் செய்யக்கோரி ஓ.டி.டி. உரிமம் பெற்ற நிறுவனமும் அழுத்தம் தருகிறதாம். இதனால் படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com