அடுத்தடுத்து வெளியாகும் நட்சத்திர நடிகர்களின் பட அப்டேட்ஸ்

ரெட்ரோ படத்தை தொடர்ந்து சூர்யா அடுத்ததாக ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ள சூர்யா 45 திரைப்படத்தில் நடித்துள்ளார். எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'ஜனநாயகன்'.
அடுத்தடுத்து வெளியாகும் நட்சத்திர நடிகர்களின் பட அப்டேட்ஸ்
Published on

ரெட்ரோ படத்தை தொடர்ந்து சூர்யா அடுத்ததாக ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ள சூர்யா 45 திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. திரிஷா படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ஸ்வசிகா , மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி,அனகா மாயா ரவி நடித்துள்ளனர். ஆர் ஜே பாலாஜி பிறந்தநாளான ஜூன் 20 ஆம் தேதி படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்த் தற்ப்பொழுது கூலி திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மோகன்லால், பாலையா, நாகர்ஜுனா , யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பல முக்கிய நட்சத்திர நடிகர்கள் நடிக்கின்றனர். ஜூன் 21 ஆம் தேதி நெல்சனின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் அப்டேட் வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'ஜனநாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகிறது. வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ஜூன் 20,21,22 என மூன்று நாளும் முன்று பெரிய நட்சத்திரங்களின் அப்டேட் அடுத்தடுத்து வர இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com