RAYA... யாஷ் பிறந்தநாளில் புதிய போஸ்டரை வெளியிட்ட டாக்ஸிக் படக்குழு

டாக்ஸிக் படத்தில், கியாரா அத்வானி, நயன்தாரா, உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரமாண்டமாக இந்த படம் உருவாகி வருகிறது.டாக்ஸிக் படம் மார்ச் மாதம் 19-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
RAYA... யாஷ் பிறந்தநாளில் புதிய போஸ்டரை வெளியிட்ட டாக்ஸிக் படக்குழு
Published on

கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் யாஷ். ராக்கி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப். திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் நடித்து இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார் யாஷ்.

இதைத் தொடர்ந்து நடிகர் யாஷ் "டாக்சிக்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார். இப்படம் டிரக் மாஃபியா உலகில் நடக்கும் கேங்ஸ்டர் டிராமாவாக இருக்கும் என படக்குழு தெரிவித்து இருந்தது.

இப்படத்தில், கியாரா அத்வானி, நயன்தாரா, உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரமாண்டமாக இந்த படம் உருவாகி வருகிறது. இப்படம் மார்ச் மாதம் 19-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த், ஹீமா குரேஷி, தாரா சுதரியா ஆகியோரின் கதாபாத்திர பெயர்களுடன் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு அப்டேட் கொடுத்தது.

அந்த வகையில் நாயகன் யாஷ்-ன் கதாபாத்திர பெயர் குறித்த போஸ்டரை அவரின் பிறந்தநாளான இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் அவரது பெயர் ராயா என அறிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com