"தக் லைஃப்" பட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியானது

தக் லைஃப் திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது.தக் லைஃப் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
"தக் லைஃப்" பட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியானது
Published on

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில், தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பின் எடுக்கப்பட்ட காட்சிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், தக் லைஃப் படக்குழுவிலிருந்து சிம்பு மற்றும் மணிரத்னம் இணைந்து கதாநாயகியாக நடிக்கும் ருக்மிணியை வைத்து எடுக்கப்பட்ட ஒரு காதல் காட்சியின் படப்பிடிப்பின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com