லோகேஷுக்கும் சேகர் கம்முலா டைரக்ஷனுக்கும் இதுதான் வித்தியாசம் - நாகார்ஜுனா

சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் "குபேரா" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 20-ந்தேதி வெளியாகிறது.
லோகேஷுக்கும் சேகர் கம்முலா டைரக்ஷனுக்கும் இதுதான் வித்தியாசம் - நாகார்ஜுனா
Published on

சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் "குபேரா" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். "குபேரா" திரைப்படம் தனுஷின் 51-வது திரைப்படமாகும். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது.

படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் ஜூன் மாதம் 20-ந்தேதி வெளியாகிறது.

மறுபக்கம் லோகேஷ் இயக்கியுள்ள ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் சில சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துள்ளார் அதில் " கூலி திரைப்படத்தில் என்னுடைய கதாப்பாத்திரம் மிகவும் முக்கியமானது. சிறிது நேரம் வந்தாலும் மிகவும் அட்டகாசமான கதாப்பாத்திரமாகும். குபேரா படத்தில் இருக்கும் என்னுடைய கதாப்பாத்திரத்திற்கும் கூலியில் என்னுடைய கதாப்பாத்திரத்திற்கும் அப்படியே எதிரானது.

குபேரா படத்தின் இயக்குநரான சேகர் கம்முலா அனைத்து காட்சிகளையும் மிகவும் எதார்த்தத்துடன் இருக்க வேண்டும் என நினைத்து இயக்குபவர். ஆனால் லோகேஷ் அனைத்தயும் லார்ஜர் தான் லைஃப் என்ற கண்ணோட்டத்தில் இயக்க கூடியவர்." என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com