தனுஷின் `நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தின் டிரெய்லர் நாளை வெளியீடு

ராயன் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
தனுஷின் `நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தின் டிரெய்லர் நாளை வெளியீடு
Published on

ராயன் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

மேலும், இந்தப் படத்தின் கோல்டன் ஸ்பேரோ மற்றும் யெடி பாடல்கள் வெளியிடப்பட்டன. இந்தப் பாடல்கள் வெளியானது முதலே நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் டிரெய்லர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதில் மாத்யூ தாம்ஸ் மற்றும் மற்றொரு நபரும் ஒரு கிச்சனில் செஃப் உடை அணிந்து கத்தியுடன் சமைக்கும் காட்சி அமைந்துள்ளது. இது எம்மாதிரியான கதைக்களத்துடன் இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com