இந்த கடல் 1000 ரகசியங்கள மறச்சு வச்சிருக்கும் - கிங்ஸ்டன் படத்தின் டிரெய்லர் வெளியானது

ஜி.வி. பிரகாஷ் குமார் அவரது 25 படமாக கிங்ஸ்டன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். கிங்ஸ்டன் படத்தை இயக்குநர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ளார்.
இந்த கடல் 1000 ரகசியங்கள மறச்சு வச்சிருக்கும் -  கிங்ஸ்டன் படத்தின் டிரெய்லர் வெளியானது
Published on

ஜி.வி. பிரகாஷ் குமார் அவரது 25 படமாக கிங்ஸ்டன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை ஜி.வி. பிரகாஷ்-இன் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. கிங்ஸ்டன் படத்தை இயக்குநர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ளார்.

இது ஜி.வி. பிரகாஷ் குமார் தயாரிக்கும் முதல் படம் ஆகும். இந்தப் படத்தில் நடிகை திவ்யபாரதி ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். கடந்த 2011-ஆம் ஆண்டு ஜி.வி. பிரகாஷ் - திவ்யா பாரதி நடிப்பில் வெளியான 'பேச்சுலர்' திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ஏற்கனவே இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியிடப்பட்டது. படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டது. இந்த நிலையில், கிங்ஸ்டன் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

டிரெயலர் காட்சி மிகவும் மிரட்டலாக அமைந்துள்ளது. கிராபிக்ஸ் காட்சிகளை மிகவும் உயர் தரத்துடன் செய்துள்ளனர்.இந்தியன் சினிமாவிலேயே முதல் முறையாக கடல் ஹாரர் திரைப்படமாக கிங்ஸ்டன் உருவாகியுள்ளது.

கிங்ஸ்டன் படத்தின் ராசா ராசா பாடல் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com