டிராகன் படத்தின் இரண்டாம் பாடல் விரைவில்... ப்ரோமோ வெளியிட்ட படக்குழு

இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார்.இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது.
டிராகன் படத்தின் இரண்டாம் பாடல் விரைவில்...  ப்ரோமோ வெளியிட்ட படக்குழு
Published on

ஓ மை கடவுளே திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக டிராகன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் கயடு லோஹர் , விஜே சித்து, ஹர்ஷத் மற்றும் பிரபல இயக்குநர்களான மிஷ்கின் , கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், சித்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளதாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ரைஸ் ஆஃப் தி டிராகன் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் அடுத்த பாடலான டிரீம் சாங் பாடலின் ப்ரோமோ வீடியோ படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த ப்ரோமோ வீடியோவில் இயக்குனரான அஷ்வத் மாரிமுத்து நடித்துள்ளார். பிரதீப் ரங்கநாதனும் அஸ்வத் மாரிமுத்தும் பல வெளிநாட்டு மாநிலங்களில் இருந்து படத்தை பற்றி நகைச்சுவையாக பேசும் காட்சி இடம் பெற்றுள்ளது. படத்தின் இரண்டாம் பாடலான வழித்துணையே வரும் ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com