பிரான்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ரசவாதி படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்

லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கைதி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அர்ஜுன் தாஸ்.இயக்குனர் சாந்தகுமார் இயக்கிய 'ரசவாதி' படத்தில் அர்ஜுன் தாஸ் நடித்திருந்தார்.
பிரான்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ரசவாதி படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்
Published on

லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கைதி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அர்ஜுன் தாஸ். அண்மையில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தின் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து மக்களின் பாராட்டை பெற்றார்.

இயக்குனர் சாந்தகுமார் இயக்கிய 'ரசவாதி' படத்தில் அர்ஜுன் தாஸ் நடித்திருந்தார். இப்படத்தில் அவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இப்படத்திற்காக அர்ஜுன் தாசுக்கு சிறந்த நடிகருக்கான விருது ஏற்கனவே வென்றார்.

முன்னதாக, லண்டன் சர்வதேச திரைப்படவிழாவில் சிறந்த ஒலி மற்றும் வடிவமைப்புக்கான விருதும், நியூஜெர்சி இந்திய மற்றும் சர்வதேச திரைப்படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டு இருந்தது .

தற்பொழுது பிரான்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் 5 பிரிவில் ரசவாதி திரைப்படம் பரிந்துறைக்கப்பட்டுள்ளது. இதனை குறிப்பிடும் வகையில் இயக்குநர் சாந்தகுமார் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் "பிரான்ஸ் திரைப்படவிழாவில் தமிழ் படமான ரசவாதி-க்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது' என தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com