லியோ படத்திற்கும் பென்ஸ்-க்கும் உள்ள தொடர்பு - வெளியான அசத்தல் அப்டேட்

லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பென்ஸ் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. ராகவா லாரன்ஸ் நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இத்திரைப்படத்தை இயக்குகிறார்.
லியோ படத்திற்கும் பென்ஸ்-க்கும் உள்ள தொடர்பு - வெளியான அசத்தல் அப்டேட்
Published on

லியோ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பென்ஸ் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. ராகவா லாரன்ஸ் நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ளார்.

இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் ஏற்கனவே ரெமோ, சுல்தான் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். பென்ஸ் திரைப்படம் லோகேஷ் சினிமாடிக் யூனிவெர்ஸ்-ல் ஒரு அங்கமாக உருவாகிறது.

படத்தின் இசையை இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைக்கிறார். படத்தில் நடிகர் மாதவன் , நிவின் பாலி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு பணிகள் கடந்த மாதம் தொடங்கியது.படத்தின் வில்லன் கதாப்பாத்திரமான ட்வின் ஃபிஷ் வால்டர் என்ற கதாப்பாத்திரத்தில் நிவின் பாலி நடிக்கிறார்.

இந்நிலையில் படத்தில் மடோனா செபாஸ்டியன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லியோ திரைப்படத்தில் மடோனா விஜயின் தங்கை கதாப்பாத்திரமாக நடித்து இருந்தார். லியோ படத்தில் மடோனா இறுதியில் இறந்து விடுவார். எனவே பென்ஸ் திரைப்படம் லியோ படத்திற்கு முன் நடக்கும் கதைக்களமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் நடிகை சம்யுக்தா மேனன் மற்றும் பிரியங்கா மோகன் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com