தேஜா சஜ்ஜா நடித்த மிராய் படத்தின் அதிரடி டிரெய்லர் ரிலீஸ்!

2011 ஆம் ஆண்டு சாம்பி ரெட்டி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார் தேஜா சஜ்ஜா பீபில் மீடியா ஃபேக்டரி நிறுவனம் மிராய் படத்தை தயாரிக்கவுள்ளனர்.
தேஜா சஜ்ஜா நடித்த மிராய் படத்தின் அதிரடி டிரெய்லர் ரிலீஸ்!
Published on

2011 ஆம் ஆண்டு சாம்பி ரெட்டி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார் தேஜா சஜ்ஜா . தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் இவர் . இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஹனுமேன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து தேஜா சஜ்ஜாவின் அடுத்த படமாக மிராய் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான கார்த்திக் கட்டாமானேனி இயக்கியுள்ளார். பீபில் மீடியா ஃபேக்டரி நிறுவனம் மிராய் படத்தை தயாரிக்கவுள்ளனர்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்ரையும் பட முன்னோட்டத்தையும் படக்குழுவினர் கடந்தாண்டு வெளியிட்டனர். இப்படம் பேரரசரான அசோகன் மற்றும் அவரது 9 ரகசியங்களை பற்றிய கதையாகும். தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் 2டி மற்றும் 3டியில் வெளியாகவுள்ளது. திரைப்படம் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி வெளியாகும் நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்தில் இடம் பெற்ற ஆக்ஷன் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் மிக நன்றாக உருவாக்கியுள்ளனர். படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்து வருகிறது.

இப்படத்தில் மனோஜ் மஞ்சு வில்லனாகவும், ரித்திகா நாயக், தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com