அன்பான ரசிகர்களுக்கு நன்றி - உலகளவில் 235 கோடி வசூலித்த ரெட்ரோ

இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
அன்பான ரசிகர்களுக்கு நன்றி - உலகளவில் 235 கோடி வசூலித்த ரெட்ரோ
Published on

நடிகர் சூர்யாவின் 44-வது படம் ரெட்ரோ. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

முதல் நாள் வசூலாக திரைப்படம் உலகளவில் 46 கோடி ரூபாயை தாண்டியது. சூர்யா நடித்த திரைப்படங்களில் மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்த திரைப்படமாக ரெட்ரோ உருமாறியுள்ளது.

இதுவரை ரெட்ரோ படம் உலக அளவில் ரூ.235 கோடி வசூலில் கடந்துள்ளதை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இது திரையரங்கு கலெச்க்ஷன் மற்றும் ஓடிடி உரிமையையும் சேர்த்து என கூறப்படுகிறது. திரைப்படம் விரைவில் ஓடிடி யில் வெளியாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com