விஜய் நடிக்கும் ஜன நாயகன் படத்தின் டீசர் அப்டேட்

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'ஜனநாயகன்'.இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி வெளியாகவுள்ளது.
விஜய் நடிக்கும் ஜன நாயகன் படத்தின் டீசர் அப்டேட்
Published on

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'ஜனநாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி வருகிறது. அதற்கு பின் முழுநேர அரசியலில் விஜய் ஈடுப்படபோவதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து இப்படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. விஜய் நடிக்க வேண்டிய காட்சி பகுதிகளின் படப்பிடிப்பு பணிகள் இந்த வார இறுதிக்குள் முடிவடைந்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதன் பின் படத்தின் மொத்த படப்பிடிப்பு பணிகளும் 15 முதல் 20 நாட்களில் முடிவடைந்துவிடும் என தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி படத்தின் டீசரை படக்குழு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com