`பராசக்தி' படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுதா கொங்கரா

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படமாக பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது.
`பராசக்தி' படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுதா கொங்கரா
Published on

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படமாக பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரிக்கிறது.

இந்த படத்தில் அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். ரவி மோகன் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது.

சமீபத்தில் வெளியான படத்தின் டைட்டில் டீசர் வீடியோ மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இணையத்தில் வைரலானது. இப்படம் இந்தி திணிப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படமாகும்.

இந்நிலையில் படத்தை குறித்த அப்டேட்டை சுதா கொங்கரா அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது என அதர்வா, ரவி மோகன் ஆகியோர் உடன் செல்ஃபி எடுத்து அதனை பதிவிட்டுள்ளார்.

மிக வேகமாக படப்பிடிப்பு பணிகள் முடிந்து வருவதால் மொத்த படப்பிடிப்பும் மே மாத இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com