மண்டாடி படத்தை தொடர்ந்து அயலான் இயக்குநருடன் கைகோர்க்கும் சூரி

மண்டாடி படத்தில் சூரி முத்துகாளி என்ற மீனவனாக நடித்துள்ளார். சூரிக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடிக்கிறார்.
மண்டாடி படத்தை தொடர்ந்து அயலான் இயக்குநருடன் கைகோர்க்கும் சூரி
Published on

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடித்து வரும் படம் `மண்டாடி' இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தெலுங்கு, தமிழ் இரு மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தில் சூரி முத்துகாளி என்ற மீனவனாக நடித்துள்ளார். நாயகியாக மகிமா நம்பியார் நடிக்கிறார். படத்தின் சத்யராஜ், சாச்சனா, அச்யுத் குமார், ரவிந்தர விஜய், சுகாஸ் நடிகின்றனர். இப்படம் கடலில் நடக்கும் படகு விளையாட்டு போட்டியை மையமாக வைத்து உருவாகி வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து இன்று நேற்று நாளை மற்றும் அயலான் படத்தின் இயக்குநரான ரவிக்குமார் இயக்கத்தில் சூரி நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com