சில சந்திப்புகள் காலத்தால் அழியாதவை - ரஜினியை பார்த்த நெகிழ்ச்சியை பதிவிட்ட சிம்ரன்

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.சிம்ரன் அண்மையில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தில் நடித்திருந்தார்.
சில சந்திப்புகள் காலத்தால் அழியாதவை - ரஜினியை பார்த்த நெகிழ்ச்சியை பதிவிட்ட சிம்ரன்
Published on

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்

இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் உலகம் முழுவதும் கூலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் வெளியாகி 4 நாட்களில் உலகளவில் மொத்தம் ரூ.404 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது.

இந்நிலையில் நடிகை சிம்ரன் , ரஜினிகாந்தை நேரில் சந்தித்துள்ளார் அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிம்ரன் அண்மையில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதுகுறித்து அவர் பதிவிட்ட பதிவில் " சில சந்திப்புகள் காலம் கடந்தது. சூப்பர் ஸ்டாரை சந்தித்தஹ்டு மிகப் பெரிய சந்தோஷம். கூலி மற்றும் டூரிஸ் ஃபேமிலி படங்களின் வெற்றி அதை இன்னும் ஸ்பெஷாலாக்கியது" என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com