குமாரசம்பவம் படத்தின் இட்லி வடை ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலமாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் குமரன் தங்கராஜன்.
குமாரசம்பவம் படத்தின் இட்லி வடை ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு!
Published on

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலமாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் குமரன் தங்கராஜன். இவர் வெள்ளி திரையில் கதாநாயகனாக களம் இறங்கியுள்ளார்.

இப்படத்திற்கு குமாரசம்பவம் என தலைப்பு வைத்துள்ளனர். படத்தை நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேனு கோபால் இயக்கியுள்ளார். வீனஸ் இன்ஃபொடெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தில் குமரவேல், பாலசரவணன், ஜி.எம் குமார், வினோத் சாகர் மற்றும் லிவிங்ஸ்டன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஒரு ஃபீல் குட் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

படத்தை இசையை அச்சு ராஜமணி மேற்கொள்ள, ஒளிப்பதிவு ஜெகதீஷ் செய்துள்ளார்.

இந்நிலையில், குமாரசம்பவம் படத்தின் இட்லி வடை என்ற ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com