ஸ்வீட்ஹார்ட் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியானது

யுவன் ஷங்கர் ராஜாவின் YSR பிலிம்ஸ் நிறுவனம் ஸ்வீட்ஹார்ட் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஸ்வீட்ஹார்ட் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியானது
Published on

யுவன் ஷங்கர் ராஜாவின் YSR பிலிம்ஸ் நிறுவனம் ஸ்வீட்ஹார்ட் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனரான ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்க ரியோ ராஜ் மற்றும் கோபிகா ரமேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தில் இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, துளசி, அருணாச்சலேஷ்வரன், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றூம் ஃபௌசி நடித்துள்ளனர். அருணாச்சலேஷ்வரன் உடன் ரியோ நடித்த காமெடி காட்சிகள் மக்களிடம் மிகவும் நன்றாக வொர்க் அவுட் ஆகியுள்ளது.

விளையாட்டுத்தனமான காதலன் எதிர்பாராமல் காதலி பிரக்னண்ட் ஆகிறாள் இதனை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள். இதற்கு என்ன ஆனது என்பதே படத்தின் ஒன் லைனாக அமைந்துள்ளது. இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஜோ திரைப்படத்தை தொடர்ந்து ரியோவிற்கு இப்படமும் வெற்றி திரைப்படமாக அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com