ஜெயிலர் 2 படத்தில் இணையும் எஸ்.ஜே சூர்யா- படப்பிடிப்பு விரைவில்...

ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் கூலி திரைப்படம் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஜெயிலர் 2 முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் கேரளா பகுதியில் நடைப்பெற்றது.
ஜெயிலர் 2 படத்தில் இணையும் எஸ்.ஜே சூர்யா- படப்பிடிப்பு விரைவில்...
Published on

ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் கூலி திரைப்படம் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள இருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் "ஜெயிலர்." இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

படத்தின் முதல் பாகத்தில் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது ஜெயிலர் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. ஜெயிலர் 2 முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் கேரளா பகுதியில் நடைப்பெற்றது.

படத்தில் தற்பொழுது நடிகர் ஃபகத் ஃபாசில் , மோகன்லால், தெலுங்கு நடிகர் பாலையா இணைந்துள்ளனர். மேலும் இந்த வரிசையில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் எஸ்.ஜே சூர்யா இணைந்துள்ளார். கில்லர் படத்தின் முதல் ஸ்கெட்யூல் முடித்த பிறகு செப்டம்பர் மாதம் படப்பிடிப்பில் இணையவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் இசையை அனிருத் மேற்கொள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் ஒளிப்பதிவை விஜய் கார்த்திக் கண்ணன் மேற்கொள்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com