சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படத்தின் படப்பிடிப்பு நிறைவு

சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படமான மதராஸி திரைப்படத்தில் நடித்துள்ளார்.திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
சிவகார்த்திகேயன் நடித்த  மதராஸி படத்தின் படப்பிடிப்பு நிறைவு
Published on

சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படமான மதராஸி திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.

சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டது. மக்களிடம் இந்த வீடியோ பெரும் அளவு வரவேற்பை பெற்றது. திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் இறுதிக்கட்ட காட்சியை இலங்கையில் படக்குழு கடந்த இரண்டு வாரங்களாக காட்சிப்படுத்தி வந்த நிலையில் படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது முடிவடைந்துள்ளது. வித்யுத் மற்றும் சிவகார்த்திகேயன் இடையே உள்ள சண்டை காட்சிகள் இலங்கையில் படம்பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் சிவகார்த்திகேயன் தற்பொழுது பராசக்தி திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com