வள்ளுவர் கோட்டத்தில் உள்ள World of Parasakthi கண்காட்சியில் சிவகார்த்திகேயனின் குடும்பத்தினர்!

பராசக்தி படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.
வள்ளுவர் கோட்டத்தில் உள்ள World of Parasakthi கண்காட்சியில் சிவகார்த்திகேயனின் குடும்பத்தினர்!
Published on

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடித்துள்ள படம், 'பராசக்தி'. இது சிவகார்த்திகேயனின் 25வது படம்.

ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரித்துள்ள இப்படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.

இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் ரிலீஸாக உள்ளது.

இதனிடையே இப்படத்தின் அடி அலையே, ரத்னமாலா பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடலான, நமக்கான காலம் பாடல் வெளியாகி உள்ளது. இப்பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதன் ஒருபகுதியாக, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பராசக்தி படத்தின் WorldOfParasakthi என்ற நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் குடும்பத்தினர் 'World of Parasakthi' கண்காட்சிக்கு வந்து பார்வையிட்டனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com