சித்தார்த்தின் 3BHK படத்தை பார்த்து பாராட்டிய சிம்பு

சித்தார்த் மற்றும் சரத்குமார் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். 3 BHK படம் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
சித்தார்த்தின்  3BHK படத்தை பார்த்து பாராட்டிய சிம்பு
Published on

சித்தார்த் 40-வது திரைப்படமாக 3 BHK திரைப்படத்தில் நடித்துள்ளார். 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக சைத்ரா நடித்துள்ளார். அவருக்கு தங்கையாக மீதா ரகுநாத்தும் அப்பா அம்மாவாக சரத்குமார், தேவயாணியும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார்.

இப்படம் 3 BHK வீடு வாங்க ஆசைப்படும் குடும்பத்தின் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, 3 BHK படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கு முன்னதாக சிறப்பு காட்சி வெளியிடப்பட்டது. இப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இயக்குநர் ராம், ரவி மோகன், மாரி செல்வராஜ் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள் படக்குழுவினரை பாராட்டினர்.

இந்த நிலையில், நடிகர் சிம்பு 3 BHK படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இப்போதுதான் 3 BHK படம் பார்த்தேன். ஒரு உணர்ச்சிப்பூர்வமான பயணத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும் ஒரு இதயப்பூர்வமான அழகான படம். சித்தார்த் மற்றும் சரத்குமார் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். ஒட்டுமொத்த படக்குழுவிற்கு வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார். இதனால் 3 BHK படம் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com