ஷேன் நிகாம் நடித்த மெட்ராஸ்காரன் திரைப்படம் தணிக்கைகுழு சான்றிதழை பெற்றது

ஷேன் நிகாம் தற்போது 'மெட்ராஸ்காரன்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக களம் இறங்கியுள்ளார். 'மெட்ராஸ்காரன் திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ஷேன் நிகாம் நடித்த மெட்ராஸ்காரன் திரைப்படம் தணிக்கைகுழு சான்றிதழை பெற்றது
Published on

கடந்த 2016-ம் ஆண்டு வெளியான 'கிஸ்மத்' படம் மூலம் மலையாள சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷேன் நிகாம்.

தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான 'இஷ்க்', 'கும்பளங்கி நைட்ஸ்', 'ஆர்டிஎக்ஸ்' உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

ஷேன் நிகாம் தற்போது 'மெட்ராஸ்காரன்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக களம் இறங்கியுள்ளார்.

இயக்குனர் வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் கலையரசன், நிஹாரிகா கொனிடேலா, ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

எஸ்.ஆர் புரொடக்சன்ஸ் சார்பில் ஜெகதீஷ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர். வசந்தகுமார் படத்தொகுப்பு செய்கிறார்.

இந்நிலையில், ஷேன் நிகாம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகும் 'மெட்ராஸ்காரன்' திரைப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com