'குட் பேட் அக்லி' படத்தை தனது மகளுடன் கண்டு ரசிக்கும் ஷாலினி

'குட் பேட் அக்லி' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. இப்படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
'குட் பேட் அக்லி' படத்தை தனது மகளுடன் கண்டு ரசிக்கும் ஷாலினி
Published on

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள படம் 'குட் பேட் அக்லி'. இப்படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

படத்தின் டிரெய்லர் வெளியானதில் இருந்து திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியது. இந்நிலையில், 'குட் பேட் அக்லி' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது.

குட் பேட் அக்லி' திரைப்படத்தை நடிகை ஷாலினி தனது மகளுடன் இணைந்து ரோகிணி திரையரங்கில் கண்டு ரசித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com