சமந்தா தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு

.டிரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் சமந்தாபடத்தின் கதையை வசந்த் எழுத பிரவீன் இயக்கியுள்ளார்.
சமந்தா தயாரிக்கும் முதல் படத்தின்  படப்பிடிப்பு பணிகள் நிறைவு
Published on

நடிகை சமந்தா சமீபத்தில் தயாரிப்பாளராகவும் களம் இறங்கினார்.டிரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி சுபம் என்ற திரைப்படத்தை தயாரித்து முடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக சமந்தா போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார். சுபம் திரைப்படம் ஒரு நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ளது.

படத்தின் கதையை வசந்த் மரிகாண்டி எழுத பிரவீன் இயக்கியுள்ளார். இவர்கள் இதற்கு முன் சினிமா பண்டி திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது. படத்தின் ஹர்ஷித், ஷிரியா, சரண், ஷாலினி, கவிரெடி ஸ்ரீனிவாஸ் மற்றும் ஷ்ராவனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படத்தின் போஸ் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைப்பெற்று வருகிறது விரைவில் திரையில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com