பராசக்தி டிரெய்லரை பாராட்டிய ரிஷப் ஷெட்டி

பாடல்கள், டீசர் எல்லாம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நேற்று படத்தின் டிரெய்லர் வெளியானது.பராசக்தி டிரெய்லர் யூடியூபில் விரைவாக 25 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
பராசக்தி டிரெய்லரை பாராட்டிய ரிஷப் ஷெட்டி
Published on

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் பராசக்தி. இந்த படத்தில் அதர்வா, ரவிமோகன், ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.10-ந்தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தின் பாடல்கள், டீசர் எல்லாம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நேற்று படத்தின் டிரெய்லர் வெளியானது.

டிரெய்லரில், டெல்லிதான் இந்தியாவா?, எங்களுக்கு இந்தி திணிப்புதான் எதிரியே தவிர, இந்தி மொழியோ, அதைப்பேசும் மக்களோ கிடையாது, 'என் செந்தமிழை காக்க பெரும்சேனை ஒன்று உண்டு' போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

பராசக்தி டிரெய்லர் யூடியூபில் விரைவாக 25 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

இந்நிலையில் பராசக்தி படத்திற்கு கன்னட திரைப்பட இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

பராசக்தி டிரெய்லர் அற்புதமாக இருக்கிறது.

சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வாமுரளி, சுதாகொங்கரா மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com